ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு – திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு!!
சட்டப்பேரவையில் ஆளுநரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவின் கூட்டணி கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
2023ஆம் ஆண்டுடின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியுள்ளது. முன்னதாக பேரவைக்கு வந்த காங்கிரஸ், விசிக, மதிமுக, இடதுசாரிகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகிய உறுப்பினர்கள் ஆளுநருக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
அவர்கள் அனைவரும் அவையின் மையப்பகுதிக்கு வந்து ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். செல்வ பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். அதே போல், காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக, மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி வெளிநடப்பு செய்தது.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததை கண்டித்து பதாகை ஏந்தி பாமக எதிர்ப்பு தெரிவித்தனர். சனாதன வேலைகளில் ஆளுநர் ஈடுபடுவதாகவும், தமிழக மக்களுக்கு எதிரானவராக அவர் இருக்கிறார் என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
தமிழக ஆளுநர் ரவி அண்மையில் பேசிய தமிழ்நாடு குறித்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு பல்வேறு கட்சியினர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்நிலையில், பேரவையிலும் திமுகவின் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
newstm.in