ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு.. தமிழக காவல்துறை அதிரடி..!
சட்டம் - ஒழுங்கு பிரச்சனை காரணமாக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் அணிவகுப்பு மற்றும் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் வரும் அக்டோபர் 2-ம் தேதி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு மற்றும் ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அனுமதி கேட்டிருந்தனர். இதையடுத்து, பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து கடந்த 22-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் நிகழும் சட்டம் - ஒழுங்கும் பிரச்சனை காரணமாக மத அடிப்படையிலாக நடைபெறக்கூடிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெறுகிறது.
இந்த சூழலில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றால் அது சட்டம் - ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பின் அணிவகுப்பு மற்றும் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
இதையடுத்து ஆர்எஸ்எஸ் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது. காவல் துறை அனுமதி மறுத்துள்ள காரணம் வலுவாக இருக்கும் பட்சத்தில், ஐகோர்ட்டும் பேரணிக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.