1. Home
  2. தமிழ்நாடு

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் தடை.. சொல்கிறார் காங்கிரஸ் எம்பி..!

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் தடை.. சொல்கிறார் காங்கிரஸ் எம்பி..!

"ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்து வகுப்புவாதத்தை பரப்பி வருகிறது. வகுப்புவாதத்தைப் பரப்புவது நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து. எனவே, ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் தடை விதிக்க வேண்டும்" என்று காங்கிரஸ் எம்பி கூறியுள்ளார்.

இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காக தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பு மற்றும் அதன் 8 துணை அமைப்புகளை சட்டவிரோத இயக்கமாக அறிவித்து 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்கு பாஜக ஆளும் அரசுகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து, கேரள காங்கிரஸ் எம்பி கொடிகுன்னில் சுரேஷ் கூறுகையில், "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு மட்டும் ஏன் மத்திய அரசு தடை விதித்துள்ளது..?. ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் தடை விதிக்க வேண்டும்.


ஏனெனில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்து வகுப்புவாதத்தை பரப்பி வருகிறது. வகுப்புவாதத்தைப் பரப்புவது நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து. ஆர்.எஸ்.எஸ், பி.எஃப்.ஐ ஆகிய இரண்டு அமைப்புகளும் ஒன்றுதான். எனவே , இரண்டையும் தடை செய்யலாம்" என்று தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like