ஆபத்தான நிலையில் இருக்கும் நடிகை குஷ்புவின் அண்ணன்...அவரே பதிவிட்ட உருக்கமான பதிவு..!!
தமிழ் சினிமாவின் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. சொல்லப்போனால், எந்த நடிகைக்கும் அமையாத அளவுக்கு நடிகை குஷ்புவிற்கு ரசிகர்கள் இருந்தனர்.குஷ்பூவிற்கு கோவில் கட்டியது தமிழ்நாட்டு ரசிகர்கள்தான். பிறகு இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். இவர்களுக்கு 20 வயதில் 2 மகள்கள் உள்ளனர். தொடர்ந்து குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது படங்கள் நடிப்பதிலிருந்து விலகி அரசியலில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து நாட்டு நடப்பு மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருவார். சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாஜக கட்சியில் இணைந்தார்.
சமீபத்தில் சுந்தர்.சி இயக்கிய காஃபி வித் காதல் படத்தைத் தயாரித்தவர், தற்போது விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மின்சார கண்ணா படத்தில் ஏற்கனவே விஜய்யுடன் இணைந்து நடித்திருந்த குஷ்பு கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், என்னுடைய சகோதரர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். வெண்டிலேட்டரில் கடந்த 4 நாட்களாக இருக்கிறார். இன்று அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் தெரிந்தது. அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதனையடுத்து குஷ்புவின் சகோதரர் நலம் பெற ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.