ஆசிரியர்களின் சம்பள பிரச்சனை.. அமைச்சர் அன்பில் சொன்ன முக்கிய தகவல்..!
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஜனவரி மாத ஊதியத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனைக்கு இன்னும் இரண்டு நாட்களில் தீர்வு காணப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது; “கொள்கை மாற்றத்தால் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இந்தப் பிரச்சனைக்கு இன்னும் இரண்டு நாட்களில் தீர்வு காணப்படும். மேலும், தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. ஆகவே, கூடிய விரைவில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்” என்று அவர் தெரிவித்தார்.