1. Home
  2. தமிழ்நாடு

அறிவிக்கப்படாத முதல்வர் உதயநிதி: சொல்கிறார் மாஜி அமைச்சர் கே.சி.வீரமணி..!

அறிவிக்கப்படாத முதல்வர் உதயநிதி: சொல்கிறார் மாஜி அமைச்சர் கே.சி.வீரமணி..!

உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் அறிவிக்கப்படாத முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். கருணாநிதி குடும்பத்தை விட மன்னார்குடி மாஃபியா கும்பலே மேல் என, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், சொத்து வரி போன்ற விலைவாசி உயர்வைக் கண்டித்தும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் மாவட்டங்கள் தோறும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் எதிரே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கே.சி.வீரமணி, “இந்தியாவிலேயே 520 வாக்குறுதிகளை கொடுத்தது திமுக கட்சி மட்டும்தான். ஆனால், அதில் ஒன்றை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை.

உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் அறிவிக்கப்படாத முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். கருணாநிதி குடும்பத்தை விட மன்னார்குடி மாஃபியா கும்பலே மேல். திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் 2 லட்சம் கோடி கடன் பெற்று, அதனை அடைக்க சொத்து வரி, வீட்டு வரி போன்று விலைவாசியை உயர்த்தியுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like