1. Home
  2. தமிழ்நாடு

அரசியலில் பரபரப்பு.. காங்கிரசில் இணைந்தார் பாஜக முன்னாள் அமைச்சர்..!

அரசியலில் பரபரப்பு.. காங்கிரசில் இணைந்தார் பாஜக முன்னாள் அமைச்சர்..!

குஜராத்தில், பாஜக அமைச்சராக இருந்த ஜெய்நாராயண் வியாஸ் தனது பதவியை ராஜினமா செய்தார். தொடர்ந்து அவர் காங்கிரசில் இணைந்தார்.

குஜராத் மாநில பாஜக அமைச்சராக இருந்தவர் ஜெய்நாராயண் வியாஸ் (75). இவர், இந்த மாத தொடக்கத்தில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, பாஜகவில் இருந்தும் விலகினார்.


இந்நிலையில், அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் ஜெய்நாராயண் வியாஸ் மற்றும் அவருடைய மகன் சமீர் வியாஸ் ஆகியோர் காங்கிரசில் இணைந்தனர்.

182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன.


இந்த நிலையில், பாஜக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஜெய்நாராயண் வியாஸ் கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த சம்பவம் குஜராத் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like