1. Home
  2. தமிழ்நாடு

அமைச்சர் மனோ தங்கராஜ் மன்னிப்பு கேட்கும் வரை இந்த பிரச்சனையை விட மாட்டேன் - குஷ்பு ஆவேசம்..!!

அமைச்சர் மனோ தங்கராஜ் மன்னிப்பு கேட்கும் வரை இந்த பிரச்சனையை விட மாட்டேன் - குஷ்பு ஆவேசம்..!!

சென்னை ஆர். கே. நகரில் அண்மையில் திமுக பொதுக்கூட்டம் நடந்தது. அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் நடந்த இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக், பாஜக மகளிர் பிரிவில் இருக்கும் நடிகைகள் குஷ்பூ, நமீதா, கௌதமி, காயத்ரி ரகுராம் ஆகியோரை ஒருமையில் அழைத்து, ஆபாசமாக இரட்டை அர்த்தத்தில் பேசினார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது .

அமைச்சர் முன்னிலையில் திமுக நிர்வாகி இப்படி பேசுகிறார் அதையும் அமைச்சர் கைதட்டி ரசித்துக் கொண்டிருக்கிறார் என்று இந்த விவகாரம் பெரிதானது . இதை அடுத்து திமுக துணை பொதுச்செயலாளரும் எம்பியுமான கனிமொழி இதற்கு மன்னிப்பு கேட்டார். ஆனால் முதல்வரோ அன்று மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர் மனோ தங்கராஜோ நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை. சைதை சாதிக் மேல்நடவடிக்கை எடுப்பார்கள் என்று பொறுத்திருந்து பார்த்தது பாஜக. இது எதுவுமே நடக்காததால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதன் பின்னர் சைதை சாதிக் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது .

இந்த நிலையில், நடிகை குஷ்பு அமைச்சர் மன்னிப்பு கேட்கும் வரைக்கும் விடமாட்டேன் என்று தெரிவித்திருக்கிறார். திமுக தலைமை இந்த விவகாரத்தில் எடுக்கும் முடிவுக்கு காத்திருந்தேன். முதல்வர் ஸ்டாலின் ஒரு கட்சி தலைவராக சைதை சாதிக் மீது உரிய நடவடிக்கை எடுப்பார் என்று காத்திருந்தேன். அதை வெளிப்படையாகவும் சொல்லியிருந்தேன். ஆனால் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


அமைச்சர் மனோ தங்கராஜ் மன்னிப்பு கேட்கும் வரை இந்த பிரச்சனையை விட மாட்டேன் - குஷ்பு ஆவேசம்..!!



சாதிக் தரம் அவ்வளவுதான். ஆனாலும் அவரது பேச்சை மேடையில் இருந்து ரசித்து கைதட்டிய அமைச்சர் மனோ தங்கராஜ் இதுவரைக்கும் அந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை. தனது தரக் குறைவான பேச்சுக்காக சாதிக் என்னிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூட நான் எதிர்பார்க்கவில்லை. அவரை விட அதிகம் குற்றம் இழைத்தவர் அமைச்சர் மனோ தங்கராஜ் தான். அவர் மன்னிப்பு கேட்கும் வரைக்கும் நானும் பாஜகவோ இந்த பிரச்சினையை விடப் போவதில்லை.

சாதிக் என்னிடம் மன்னிப்பு கேட்டார் என்று சொல்லி பிரச்சனையை அப்படியே அமுக்க பார்க்கின்றார்கள். இதுவரைக்கும் திமுக தரப்பில் இருந்து யாரும் என்னிடம் பேசவில்லை. டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்திற்கு வரும் 4ஆம் தேதி நேரில் புகார் கொடுக்க இருக்கிறேன். எனக்கு நியாயம் கிடைக்கும் வரை ஓயமாட்டேன் என ஆவேசமாக பேசினார்.

Trending News

Latest News

You May Like