1. Home
  2. தமிழ்நாடு

அமைச்சரை சுட்டுக்கொன்றது ஏன்? – பரபரப்பு வாக்குமூலம்!!

அமைச்சரை சுட்டுக்கொன்றது ஏன்? – பரபரப்பு வாக்குமூலம்!!

ஒடிஷாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசில், சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த நபா தாஸ், ஜார்சுகுடா மாவட்டம் பிரஜராஜ்நகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றிருந்தார்.

அப்போது அவர் காரை விட்டு இறங்கியதும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உதவி காவல் ஆய்வளர் கோபால் தாஸ் என்பவர் அமைச்சரின் மார்பை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டார். குண்டடிப்பட்ட அமைச்சர் சரிந்து கீழே விழுந்தார்.


அமைச்சரை சுட்டுக்கொன்றது ஏன்? – பரபரப்பு வாக்குமூலம்!!


அப்போது உள்ளூர் காவல்நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட இருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதனையடுத்து மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்திய கோபால் தாஸ் கைது செய்யப்பட்டார்.

முதலில் மாவட்ட மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மேல் சிகிச்சைக்காக புவனேஷ்வருக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அமைச்சர் நபா தாஸ் உயிரிழந்தார்.


அமைச்சரை சுட்டுக்கொன்றது ஏன்? – பரபரப்பு வாக்குமூலம்!!


அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. அமைச்சரை சுட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், கோபால் தாஸ் பல ஆண்டுகளாக மன அழுத்தம் மற்றும் உயர் ரத்த அழுத்ததால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர் தொடர்ந்து மருந்து எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

உறவினர் ஒருவருக்கு வேலை கேட்டு சுகாதாதாரத் துறை அமைச்சர் நபா தாஸை மூன்று மாதங்களுக்கு முன்பு கோபால் தாஸ் சந்தித்துள்ளார். ஆனால் வேலை வாங்கித் தராததால் அமைச்சரை கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like