1. Home
  2. தமிழ்நாடு

அன்பில் மகேஷ் உடல்நிலை.. வெளியானது பரபரப்பு தகவல்..!

அன்பில் மகேஷ் உடல்நிலை.. வெளியானது பரபரப்பு தகவல்..!

அமைச்சர் அன்பில் மகேஷுக்கு இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷுக்கு காய்ச்சல் மற்றும் உடல் சோா்வு இருந்ததால் சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். மருத்துவா்களின் ஆலோசனையின்படி, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.


இந்நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நிலை குறித்து மா.சுப்பிரமணியன் கூறியதாவது: "அன்பில் மகேஷுக்கு எச்1என்1 என்ற இன்ஃபுளுயன்சா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் கண்காணிப்பில் நலமாக இருக்கிறார். சிகிச்சைக்கு பிறகு இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார்" என்று விளக்கம் அளித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like