1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி! மருமகளை செங்கல்லால் அடித்த மாமனார்!!

அதிர்ச்சி! மருமகளை செங்கல்லால் அடித்த மாமனார்!!

வேலைக்கு சென்ற மருமகளை மாமனார் செங்கல்லால் அடித்து துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி பிரேம்நகர் பகுதியைச் சேர்ந்த காஜல் (27) என்பவருக்கு பிரவீன் குமார் என்பவருடன் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு தற்போது 3 வயதில் குழந்தை உள்ளது.

பட்டப்படிப்பு முடித்திருக்கும் காஜல் திருமணம் முடிந்து கணவர் குடும்பத்தாரை மட்டுமே கவனித்து வந்துள்ளார். காஜலின் கணவர் பிரவீன் தனியார் நிறுவனத்தில் குறைந்த சம்பளத்தில் பணிபுரிந்து வருகிறார்.

அவரது சம்பளத்தால் குடும்பத்தை நடத்த முடியாததால் காஜல் வேலைக்கு செல்ல முடிவு செய்து குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

காஜல் வேலைக்கு செல்வதற்கு கணவர் மற்றும் மாமனார் சம்மதிக்கவில்லை. ஆனால் வேறு வழியின்றி அவர்களது பேச்சை கேட்காமல் 2 நாட்களுக்கு முன்னர் அவர் வேலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது அவரை இருவரும் தடுக்க முயன்றனர்.

அதையும் மீறி அவர் சென்றதால், பின்னால் சென்ற மாமனார், அருகில் இருந்த செங்கல்லை கொண்டு மருமகளின் தலையில் தாக்கினார். இதில் அப்பெண் நிலைகுலைந்து இரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.

அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட வந்தது. தன்னை தனது மாமனார் தாக்கியதாக அப்பெண் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் மாமனார் தாக்குவது குறித்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. பல்வேறு தரப்பினரும் பெண்ணின் மாமனாருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

 

Trending News

Latest News

You May Like