1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி! தீம் பார்க்கில் சிறுவன் மரணம்!!

அதிர்ச்சி! தீம் பார்க்கில் சிறுவன் மரணம்!!

தீம் பார்க்கில் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் - உஷா தம்பதி மகன்கள் சௌடேஸ்வரன், துவேஸ்வரனுடன் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே உள்ள பரவச உலகம் என்ற தனியார் தீம் பார்க்கிற்கு சென்றனர்.

காலை மணியில் இருந்து சிறுவர்கள் அங்கு விளையாடியுள்ளனர். தண்ணீரிலிருந்து வெளியே வந்த சௌடேஸ்வரன் மூச்சு விட சிரமாக இருப்பதாகவும், மயக்கம் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


அதிர்ச்சி! தீம் பார்க்கில் சிறுவன் மரணம்!!

சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த சிறுவனை அருகில் இருந்த தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கிருந்த மருத்துவர்கள் செளடேஸ்வரன் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

பின்னர் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இது தொடர்பாக நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


அதிர்ச்சி! தீம் பார்க்கில் சிறுவன் மரணம்!!

பள்ளி விடுமுறையை கொண்டாட தீம் பார்க் சென்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீரில் அதிக அளவில் குளோரின் கலக்கப்பட்டிருந்ததால் தான் தனது மகன் உயிரிழந்துவிட்டதாக அவனது தந்தை கூறியுள்ளார்.

மேலும் தீம் பார்க்கில், முதலுதவி மையமோ, அவசர ஆம்புலன்ஸ் வசதியோ இருந்திருந்திருந்தால் சிறுவனின் உயிர் காப்பற்றப்பட்டிருக்கும், எனவே இதுபோன்ற அதிக மக்கள் கூடும் கேளிக்கை பூங்காக்களில் உரிய பாதுகாப்பு வசதிகளை அரசு உறுதிபடுத்தவேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like