1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி! தயிர் பாக்கெட்டில் இந்தி திணிப்பு!!

அதிர்ச்சி! தயிர் பாக்கெட்டில் இந்தி திணிப்பு!!

மத்திய அரசு தற்போது தயிர் பாக்கெட்டில் இந்தியை திணிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டில் இந்தியை திணிப்பதற்கான வேலையை செய்து வருகிறது. பல்வேறு வழிகளை பின்பற்றிய மத்திய அரசு தற்போது புதுமாதிரியாக தயிர் பாக்கெட்டை கையில் எடுத்துள்ளது.

தமிழ்நாட்டின் ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி தயிர் பாக்கெட்டுகளில் தமிழில் ‘தயிர்’ கன்னடத்தில் ‘மோசரு’ போன்ற வார்த்தைகளை தவிர்த்து அதற்கு பதிலாக “தஹி” என்ற இந்தி வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

அடைப்பு குறிக்குள் தமிழ் மற்றும் கன்னட வார்த்தைகளை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தென்மாநிலங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அதிர்ச்சி! தயிர் பாக்கெட்டில் இந்தி திணிப்பு!!

இந்த அறிவிப்புக்கு சமூகவலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விதியை பின்பற்றாத பட்சத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆவின் மற்றும் நந்தினி அமைப்புகளின் உரிமைகளை ரத்து செய்யும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து கர்நாடக அரசின் நந்தினி நிறுவனம் சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாடு அரசின் ஆவின் சார்பாகவும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு வழிகளில் இந்தியை திணித்து வரும் மத்திய அரசு இப்போது தயிர் பாக்கெட்டுகளிலும் இந்தியை திணிக்க முயற்சிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like