1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி! சிறுமியை போதையாக்கி வன்கொடுமை செய்த கும்பல்!!

அதிர்ச்சி! சிறுமியை போதையாக்கி வன்கொடுமை செய்த கும்பல்!!

சிறுமியை கடத்தி போதை பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் கொண்ட கும்பலை போலிஸார் தேடி வருகின்றனர்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் கிராமத்தில் வசித்து வந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த ஜூன் மாதம் காணாமல் போனார். பல இடங்களில் தேடிய சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

பல இடங்களில் விசாரணை நடத்திய போலீஸார் இறுதியில் ஆகஸ்ட் மாதம் திருவனந்தபுரத்தில் ஒரு வீட்டில் இருந்து சிறுமியை மீட்டனர். அப்போது சிறுமி போதைக்கு அடிமையாகி மோசமான நிலையில் இருந்துள்ளார்.

அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், தற்போது நல்ல நிலைமையில் இருக்கும் சிறுமியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது.


அதிர்ச்சி! சிறுமியை போதையாக்கி வன்கொடுமை செய்த கும்பல்!!

தெருவில் நடந்து சென்ற சிறுமியை கடத்திய 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று திருச்சூர், எர்ணாகுளம், திருவனந்தபுரம் உட்பட பல இடங்களுக்கு சிறுமியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

சிறுமிக்கு அதிக அளவில் போதைப்பொருள் அளித்து மயக்கநிலையிலேயே வைத்துள்ளனர். அந்த நிலையிலும் சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், சிறுமியிடம் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து 4 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like