அதிர்ச்சி! உதவி ஆட்சியரை கடித்து குதறிய நாய்கள்!!
உதவி ஆட்சியரைத் தெருநாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் சித்திபேட்டையில் சீனிவாச ரெட்டி என்பவர் உதவி ஆட்சியராக பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம்போல் அலுவலகத்திற்கு சென்று காரில் இருந்து இறங்கி தனது அறைக்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த சில தெருநாய்கள் அவரை சுற்றிவளைத்து கடித்தன. இதில் உதவி ஆட்சியர் சீனவாச ரெட்டிக்குக் இரண்டு காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
அங்கிருந்த உதவியாளர்கள் தெருநாய்களை விரட்டி உதவி ஆட்சியரை மீட்டு அருகே இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் அதேஇடத்தில் நாய் கடித்ததில் சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளான். அதேபோல் தெருநாய் கடித்ததில் ஆட்சியரின் வளர்ப்பு நாயும் படுகாயம் அடைந்துள்ளது.
தெலங்கானாவில் சில மாதங்களாகவே தெருநாய்களின் தொல்லை அதிகமாக இருக்கிறது. சமீபத்தில் கூட சாலையில் நடந்து சென்று தெருநாய்கள் கடித்ததில் ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
newstm.in