அதிக விவாகரத்து பெறுவது இவர்கள் தான் - சுப்ரீம் கோர்ட் கருத்து..!
காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் தொடர்பான வழக்கு, நேற்று (மே 17) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர்.காவை, சஞ்சய் கரோல், காதல் திருமணத்தில் எழுந்த விவகாரம் என்பது தெரிய வந்தவுடன், காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் இருந்துதான் விவாகரத்தும் அதிகரிக்கிறது என்று கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து காதல் திருமணம் செய்த தம்பதிகளுக்கு இடையே சமரசம் செய்ய முயற்சி செய்தனர். ஆனால், கணவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து, சமீபத்தில் நீதிமன்றம் உடனடி விவாகரத்து வழங்கலாம், ஆறு மாத காலம் காத்திருக்க வேண்டியதில்லை என்ற தீர்ப்பின் அடிப்படையில் தம்பதிகளுக்கு கணவரின் சம்மதத்தின் பேரில் விவகாரத்து வழங்கி சுப்ரீம் கோர்ட் நீதிபதி உத்தரவிட்டார்.
.png)