1. Home
  2. தமிழ்நாடு

அசல் போல் இருக்கும் போலி...!! மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. எச்சரிக்கை..!

அசல் போல் இருக்கும் போலி...!! மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. எச்சரிக்கை..!

சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'சி.பி.எஸ்.இ. அதிகாரபூர்வ இணையதளமான www.cbse.gov.in-ஐ போல https://cbsegovt.com என்ற பெயரில் சில சமூக விரோதிகள் இணையதளம் உருவாக்கி உள்ளனர்.

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்குவதற்கு பணம் டெபாசிட் செய்யுமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு செய்திகளை அனுப்பி அப்பட்டமாக ஏமாற்றும் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன' என கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் மாணவர்கள் மிகுந்த கவனமுடன் இருக்குமாறும், மேற்படி இணையதளத்தில் பணம் செலுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ள சி.பி.எஸ்.இ., ஹால் டிக்கெட் பதிவிறக்கத்துக்கு நேரடியாக ஒருபோதும் பணம் கேட்பதில்லை என்றும் விளக்கம் அளித்து உள்ளது.

Trending News

Latest News

You May Like