1. Home
  2. தமிழ்நாடு

அங்கன்வாடி மையங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்துகொள்ளலாம் - பள்ளிக்கல்வித்துறை..!!

அங்கன்வாடி மையங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்துகொள்ளலாம் - பள்ளிக்கல்வித்துறை..!!

2022-23-ஆம் கல்வியாண்டு முதல் ஊராட்சி பள்ளிகள், தொடக்க பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள 2, 381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடர்ந்து நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு அங்கன்வாடி மையத்தில் ஒரு ஆசிரியர் வீதம் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு 2,381 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இல்லம் தேடிக் கல்வித்' திட்டத்தில் பணிபுரியும் தகுதி வாய்ந்த தன்னார்வலர்களை மழலையர் வகுப்புகள் இயங்கும் பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழுவே தேர்ந்தெடுத்து தற்காலிக ஆசிரியராக நியமிக்கலாம் என்றும், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தகுதி வாய்ந்த நபர் இல்லாத போது தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்ற பிற நபர்களை நியமனம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கன்வாடி மையங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்துகொள்ளலாம் - பள்ளிக்கல்வித்துறை..!!


சிறப்பு தற்காலிக ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் ஏப்ரல் வரை 11 மாதங்கள் மட்டுமே பணிக்காலம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், இவர்களது பணி முழுக்க முழுக்க தற்காலிகமானது என்றும், சிறப்பு ஆசிரியர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் தொகுப்பு ஊதியம் வழங்கவும் பள்ளி மேலாண்மை குழு உத்தரவிட்டுள்ளது .

Trending News

Latest News

You May Like