1. Home
  2. தமிழ்நாடு

இனி 15 நிமிட உணவு டெலிவரி சேவை கிடையாது - சொமேட்டோ..!

1

சொமேட்டோ எவ்ரிடே என அழைக்கப்பட்ட இந்த சேவை, பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களில் செயலில் இருந்தது. இரண்டு கிலோமீட்டர் சுற்றுவட்டத்தில் உள்ள உணவகங்களில் இருந்து மிக விரைவாக, 15 நிமிடத்துக்குள் உணவை வீடுகளுக்கு கொண்டு செல்லும் வசதியாக இது செயல்பட்டது.

ஆனால், தொழில்நுட்ப சிக்கல்கள், செயல்முறை பிரச்சனைகள் ஆகியவை இந்த சேவையை நிறுத்த வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளன.

மேலும் செப்டோ கஃபே, பிளிங்கிட் பிஸ்ட்ரோ, பிக்பாஸ்கெட் போன்றவையுடன் போட்டியிட ஜொமைட்டோ பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சில சேவைகள் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் போனாலும், அவை மறுசீரமைப்புடன் மீண்டும் உருவாக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சேவையும், விரைவில் புதுப்பிப்பு செய்யப்பட்டு மீண்டும் தொடங்கும் வாய்ப்பு இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Trending News

Latest News

You May Like