லட்சுமி நாராயண யோகத்தால் ராஜ வாழ்க்கை வாழப்போகும் ராசிகள்..!
சுக்கிரனின் சொந்த ராசியான துலாம் ராசியில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. அதுவும் இந்த சேர்க்கையானது நவம்பர் மாதத்தில் உருவாவுள்ளது. இந்த யோகமானது சுமார் 5 ஆண்டுகளுக்கு பின் துலாம் ராசியில் உருவாக போகிறது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. முக்கியமாக நிதி நிலையில் உயர்வு ஏற்படப் போகிறது. இப்போது துலாம் ராசியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டில் சுக்கிரன் மற்றும் புதனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டு தொழிலில் பெரிய அளவில் லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் தேடி வரும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
கன்னி
கன்னி ராசியின் 2 ஆவது வீட்டில் சுக்கிரன் மற்றும் புதனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் பேச்சு ஈர்க்கும் வகையில் இருக்கும். பேச்சால் பல முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். முக்கியமாக நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
மகரம்
மகர ராசியின் 10 ஆவது வீட்டில் சுக்கிரன் மற்றும் புதனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் சிறப்பான முன்னேற்றத்தைப் பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவதோடு, புதிய திறன்களையும் வளர்த்துக் கொள்வார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவார்கள். சிலருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவதற்கும் வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கவும் முடியும்.