சென்னையில் (ZAD)“ZERO ACCIDENT DAY” போக்குவரத்து திட்டம் துவக்கம்..!
இந்தியாவிலேயே முதன்முறையாக, சாலை விபத்துகளைக் குறைக்க, வாகன ஓட்டிகளிடையே சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் பொறுப்பான வாகனம் ஓட்டும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில், ZAD (ZERO ACCIDENT DAY) என்ற விரிவான மெகா விழிப்புணர்வு பிரச்சாரத்தை 20 நாள் சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறை தொடங்கியுள்ளது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் 20 நாட்களுக்கு செயல்படும் மற்றும் 26.08.2024 அன்று “ZERO ACCIDENT DAY” ஆக அனுசரிக்கப்படும். இந்த பிரச்சாரத்தின் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் அணுகுமுறைகளும் அர்ப்பணிக்கப்படும்.
சென்னை பெருநகரில் சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவம், போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிப்பது மற்றும் அனைத்துப் பயணிகளுக்கும் பாதுகாப்பான சாலைகளை உறுதி செய்வதற்கான கூட்டுப் பொறுப்பு ஆகியவற்றைப் பற்றி பொதுமக்களுக்குக் கற்பிப்பதும், அந்த நாளை “விபத்து இல்லாத நாளாக மாற்றுவதற்கு அனைத்து வாகன ஓட்டிகளும் மற்றும் சாலைப் பயணிகளும் பொறுப்பாவர்களாகும்” என்பதை வாகன ஓட்டிகளுக்கு உணர்த்துவதே இந்தத் திட்டத்தின் முக்கியமான நோக்கமாகும்.
இந்நிலையில் சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் “ZERO ACCIDENT DAY” (ZAD) என்ற போக்குவரத்து விழிப்புணர்வு திட்டத்தை துவக்கி வைத்தார்.