மன்னிப்பு கேட்டது ஜி நியூஸ்..!

நடிகர் சுசாந்த் மரணத்திற்கு அவரது தோழியும் நடிகையுமான ரியா தான் முக்கிய காரணம் என 'ஜி நியூஸ்' செய்தி வெளியிட்டது. தற்போது, சுசாந்த் மன அழுத்தம் காரணமாக தான் தற்கொலை செய்தார் என சிபிஐ கூறியுள்ளது. இதனால், ஆதாரமின்றி ரியா மீது குற்றம் சுமத்தியதால் 'ஜி நியூஸ்' மன்னிப்பு கோரியுள்ளது.
முன்னாள் எம்.பி.யும் ஜீ செய்திகள் நிறுவன உரிமையாளருமான சுபாஷ் சந்திராவின் எக்ஸ் பதிவில் கூறியதாவது, சுஷாந்த் சிங் மரண வழக்கில் சிபிஐ இறுதி அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. முன்னர், இந்த தற்கொலை வழக்கில் ரியா சக்ரவர்த்தி மீது ஜீ செய்திகள் குற்றம் சாட்டியது.
ரியா மீது குற்றம் சாட்டியதற்காக, ஜீ செய்திகளின் உரிமையாளர் மற்றும் வழிகாட்டி என்ற முறையில் ரியா சக்ரவர்த்தியிடம் மன்னிப்பு கோருகிறேன் என்று தெரிவித்துள்ளார்