1. Home
  2. தமிழ்நாடு

வீட்டுக் காவலுக்கு வந்த போலீசாருக்கு ஆரத்தி எடுத்த முதல்வரின் தங்கை..!!

ys sharmila
தலித் பந்து திட்டத்தின் கீழ் பிற்படுத்த மக்களுக்கு நிதியுதவி வழங்கப்படாததை கண்டித்து போராடி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்த ஓய்.எஸ்.ஆர் ஷர்மிளா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். 

தெலங்கானாவில் பட்டியிலனத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு முதலீட்டுத் தொகையாக ரூ. 10 லட்சம் முழு மானியமாக தலித் பந்து திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. அதில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி மானியம் கிடைக்காத பட்டியலின மக்கள் பலர்  கஜ்வேல் அடுத்துவுள்ள தீகுல் கிராமத்தில் போராடி வருகின்றனர்.

அவர்களுடைய போராட்டம் கடந்த சில நாட்களாக நீடித்து வருகிறது. அதற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதிரியான ஷர்மிளா அங்கு வருவதாக இருந்தார். ஹைதராபாத்தில் இருக்கும் அவருடைய வீட்டில் இருந்து புறப்படாத வகையில்  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

போலீசாருடன் ஷர்மிளா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் அவர் எங்கும் செல்ல முடியாத படி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக,  தன்னை வெளியே செல்லவிடாமல் தடுத்து நின்ற போலீசாருக்கு ஒய்.எஸ்.ஆர். ஷர்மிளா கற்பூர ஆராத்தி எடுத்தார்.

தனது வீட்டின் முன்பு அமர்ந்து மாநில அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். தற்போதைய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஒரு பட்டியலின துரோகி, தன்னைப் பார்த்து அவர் அஞ்சுகிறார். தலித்துபந்து ஊழல் பற்றி முதல்வர்  நன்றாக பேசுகிறார். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. கே.சி.ஆருக்கு ஆட்சியமைக்கும் தகுதி இல்லை என்று பல்வேறு வகையில் கத்தி அவர் கோஷமிட்டார். 
 

 

Trending News

Latest News

You May Like