1. Home
  2. தமிழ்நாடு

எல்லை மீறும் யூடுபர்கள்...விஜே சித்துவுக்கு குவியும் கண்டனம்!

1

தனியார் யூடியூப் சேனலிலும் தொலைக்காட்சிகளிலும் பணியாற்றிய விஜே சித்து தற்போது விஜே சித்து விலாக்ஸ் என்ற யூட்யூப் சேனலை தொடங்கி இருக்கிறார். அவரை சுமார் 4 மில்லியன் ஃபாலோயர்கள் பின்தொடர்கின்றனர்.அவரது சேனலில் வருவது எந்த வகையான கன்டென்ட் கொண்ட சேனல் என்பதே தெரியாத அளவுக்கு பல வகை வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

குறிப்பாக வெளிநாட்டு பயணங்கள், திரைப்படங்கள் குறித்த விமர்சனங்கள், நடிகர் நடிகைகளின் பேட்டிகள், தாங்கள் சாப்பிடும் உணவுகள் குறித்த வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். தொடர்ந்து நகைச்சுவைக்காக அவரது வீடியோக்கள் மில்லியன் கணக்கான வியூவ்ஸ்களை அள்ளி வருகிறது. இந்த நிலையில் 90'ஸ் கிட்ஸ் காலத்து விளையாட்டுகள் பற்றி விஜே சித்து பேசி, அதனை வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார். அதில் அவருடன் பணியாற்றும் ஹர்ஷத் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

நிக்கல் குந்தல் என்ற பழைய விளையாட்டு விளையாடும் வீடியோவை விஜே சித்து தனது சேனலில் வெளியிட்டு இருந்தார். அது தான் அவருக்கு கடும் விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது. குந்தல் என சொல்வதற்கு முன்பாகவே அவர் உட்கார ஒரு கட்டத்தில் காமெடி என்ற பெயரில் மற்றவர்களை ஒருமையில் பேசுவது அடித்து துன்புறுத்துவதாக பிஜே சித்து மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.
 

அந்த வீடியோவில் இருப்பவரை அடித்தது மட்டுமல்லாமல் அவரை காலால் எட்டி உதைத்தது நெட்டிசன்களை கடுமையாக கொந்தளிக்க வைத்துள்ளது. காமெடிக்காக விளையாட்டுக்காக என்றாலும் உங்கள் உடன் வேலை செய்பவர்கள் என்றாலும் இப்படியா நடந்து கொள்வது வீடியோ வியூவ்ஸ்களை அள்ள வேண்டும் என்பதற்காக என்ன வேண்டாலும் செய்யலாமா? என விஜே சித்துவிற்கு எதிராக கண்டனம் வெடித்துள்ளது. சில நாட்களாகவே அவரது வீடியோக்கள் காமெடி இல்லாமல் வறண்டு போய் கிடப்பதாகவும், இதனால் வலுக்கட்டாயமாக சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற துன்புறுத்தல் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகின்றனர் நெட்டிசன்கள்.

மேலும் இரட்டை அர்த்த வசனங்கள், பாடி ஷேமிங் செய்வது எனவும் அவரது வீடியோக்கள் எல்லை மீறி வருகிறது என கடும் விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் தான், தான் பதிவிட்ட வீடியோவுக்கு கடுமையான கருத்துக்களும் எதிர்மறை விமர்சனங்களும் வந்ததால் அந்த வீடியோவில் இருந்து குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்கி இருக்கிறார். இருந்த போதும் அதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்துள்ள நெட்டிசன்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.


 

Trending News

Latest News

You May Like