1. Home
  2. தமிழ்நாடு

தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை - மன்னிப்பு கோரினார் யூடியூபர் இர்பான்...!

1

இந்தியாவில் குழந்தை பிறக்கும் முன்னரே அது என்ன குழந்தை என்பதை வெளியிடுவது சட்டப்படி குற்றம்.கருவிலேயே ஆணா பெண்ணா என்று கண்டறிந்து பெண் குழந்தை என்றால் கருக்கலைப்பு செய்யும் அதிர்ச்சி சம்பவங்கள் நடைபெற்றன. இதனால் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறையும் அபாயம் ஏற்பட்டது.இதன் காரணமாக இந்தியாவில் பிறப்புக்கு முன்பே கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கேட்பதோ அல்லது கண்டறிந்து அறிவிப்பதோ மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளதோடு குற்றம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொள்வதற்கு தடை விதித்ததால் இர்பான் துபாய்க்கு தன்னுடைய மனைவியை அழைத்து சென்றிருக்கிறார்.அவர் அங்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருக்கு பெண் குழந்தை பிறக்கப்போகிறது என்று தெரிய வந்திருக்கிறது. இதை இவர் கொண்டாடும் விதமாக தன்னுடைய நெருங்கிய நண்பர்களுடன் மட்டும் பார்ட்டி வைத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தனக்கு பிறக்கப் போவது பெண் குழந்தை என்று மகிழ்ச்சியுடன் இர்ப்பான் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார். இந்தியாவில் குழந்தை பிறக்கும் முன்னரே அது என்ன குழந்தை என்பதை வெளியிடுவது சட்டப்படி குற்றமாக இருக்கும் நிலையில், இர்ஃபான் மட்டும் எப்படி வெளியிடலாம் என நெட்டிசன்கள் கேள்வி கேட்க தொடங்கினர்

இந்த நிலையில் இர்பான் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக நேற்று வாட்ஸ்அப் மற்றும் இ-மெயில் மூலம் விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து தன்னை தொடர்பு கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் இர்பான் மன்னிப்பு கோரினார்.

மேலும், இர்பான் மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் தொடரும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like