யூடியூபர் திவ்யா உட்பட 4 பேர் கைது..!

யூடியூபர் திவ்யா மீது சென்னை டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அதில், தஞ்சையைச் சேர்ந்த யூடியூபர் திவ்யா மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த அவரது நண்பர் கார்த்தி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூரில் ரீல்ஸ் எடுப்பதற்காக வந்துள்ளனர். தனியார் தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் சித்ரா என்பவர், யூடியூபர் திவ்யா சிறுவர்களுடன் இணைந்து பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போன்று வீடியோவை எடுத்துத் தருமாறு நண்பர் கார்த்தியிடம் கூறியிருக்கிறார்.
அதன்பேரில், சிறுவர்களை வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வீடியோ எடுத்ததாக யூடியூபர் திவ்யா, கார்த்தி மற்றும் ஆனந்த், சித்ரா ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் சித்ரா என்பவர் தான், திவ்யாவிடம் பணம் பறிப்பதற்காக இது மாதிரியான வீடியோக்களை எடுக்க சொல்லி இருப்பதாக தெரியவந்தது.
சிறுவர்கள் மைனர் என்பதால் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மீனாட்சி ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் போக்சோ உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.