யூடியூப் வைத்த செக்..! இனி பணம் சம்பாதிக்க புதிய கட்டுப்பாடு..!
யுடியூப் தனது கொள்கையில் புதிய மாற்றங்களை செய்துள்ளது. இது வரும் 15ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களின் விதிகளை பூர்த்தி செய்யாத சேனல்கள், பணம் வழங்கும் யூடியூப் பார்ட்டனர் திட்டத்தில் ( Youtube Partner Program(YPP)) இருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதாவது, யூடியூப் சேனல் மூலம் பணம் சம்பாதிக்க 1,000 சந்தாதாரர்கள், கடந்த 12 மாதங்களில் 4,000 பொதுப் பார்வை நேரம் அல்லது கடந்த 90 நாட்களில் 10 மில்லியன் குறுவீடியோ பார்வையாளர்கள் கொண்டவர்களே யூடியூப்-ல் வருமானத்திற்காக முறையிட முடியும் என்பது மட்டும் இனிமேல் போதாது.
புதிய விதிகள் என்ன
1. தாங்களாக முயற்சி செய்து புதிய படைப்புகளை உருவாக்கும் அசல் படைப்பாளிகளுக்கு மட்டுமே வருமானம் வழங்கப்படும். அவர்களின் வீடியோ மட்டுமே விளம்பரப்படுத்தப்படும்.
2.மீண்டும், மீண்டும் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள்
3.ஒன்றைப் போலவே மற்றொன்றை உருவாக்கும் வீடியோக்கள்
4. தரம் குறைந்த வீடியோக்களுக்கும் பணம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மிகக் குறைந்த முயற்சியில் உருவாக்கப்பட்ட வீடியோக்கள், மற்றவர்களின் வீடியோவை காப்பி அடித்து சில திருத்தங்கள் மட்டும் செய்து உருவாக்கப்பட்ட வீடியோக்கள், செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோக்கள், டெம்ப்லேட் மாடல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் போன்றவற்றுக்கு இனிமேல் யூடியூப் நிறுவனம் பணம் தராது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.