தாய்ப்பாசத்தால் பைக்கிலேயே 2,300 கிமீ தூரம் பயணித்து தமிழகம் திரும்பிய இளைஞர்!

தாய்ப்பாசத்தால் பைக்கிலேயே 2,300 கிமீ தூரம் பயணித்து தமிழகம் திரும்பிய இளைஞர்!

தாய்ப்பாசத்தால் பைக்கிலேயே 2,300 கிமீ தூரம் பயணித்து தமிழகம் திரும்பிய இளைஞர்!
X

ஊரடங்கால் குஜாராத் மாநிலம் அகமதாபாத்தில் சிக்கியிருந்த  பொறியாளர் ஒருவர் உடல்நிலை சரியில்லாத தனது தாய் மற்றும் மனைவி, மகன்களை பார்ப்பதற்காக 2,300 கிலோமீட்டர் பைக்கிலேயே பயணித்து தமிழகம் திரும்பியுள்ளார்.

 அகமதாபாத்தில் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வரும் சந்திரமோகன் என்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பை சேர்ந்தவர். கொரோனா ஊரடங்கு காரணமாக அவர் ஒரு மாத காலம் குஜராத்திலேயே தங்கிவிட்டார். இந்நிலையில், அவருடைய தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், தமிழகத்திற்கு பைக்கிலேயே செல்ல சந்திரமோகன் விண்ணப்பித்தார்.  மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததை அடுத்து கடந்த 22ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா வழியாக சுமார் 2,300 கிலோமீட்டர் பயணித்து கரூர் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றடைந்தார். 

newstm.in

Next Story
Share it