டிக்-டாக்கில் லைக்குகள் கிடைக்காததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

டிக்-டாக்கில் லைக்குகள் கிடைக்காததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

டிக்-டாக்கில் லைக்குகள் கிடைக்காததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!
X

தன்னுடைய டிக்-டாக் வீடியோக்களுக்கு அதிகமான லைக்குகள் கிடைக்காததால் நொய்டா இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கு என்பதால் வீட்டில் பொழுதை போக்க நொய்டாவை சேரந்த 18 வயது இளைஞர் ஒருவர் டிக்டாக் வீடியோக்களை பதிவிட்டுள்ளார். வீட்டில் அந்த இளைஞரும் அவரது தந்தை மட்டுமே வசிந்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே வீடியோக்ககளுக்கு அதிகமான லைக்குகள் வருவதில்லை அவர் தன் தந்தை மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த இளைஞர் அறை மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 


தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் இளைஞரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். டிக்-டாக் வீடியோவிற்கு லைக்குகள் கிடைக்காததால் இளைஞர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக அக்கம் பக்கத்தில் வசிப்போர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து  காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it