1. Home
  2. தமிழ்நாடு

இளைஞர் கொலை வழக்கு… அதிமுக பிரமுகர் மீது அதிரடி நடவடிக்கை!

இளைஞர் கொலை வழக்கு… அதிமுக பிரமுகர் மீது அதிரடி நடவடிக்கை!


தூத்துக்குடியில் நிலப்பிரச்னை காரணமாக செல்வன் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அதிமுக பிரமுகர் சரணடைந்ததை அடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி, தட்டார்மடம் அருகே உள்ள சொக்கன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த செல்வன் என்பவருக்கும் அதிமுக பிரமுகர் திருமணவேல் என்பவருக்கும் நிலப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி செல்வனை அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்தனர். செல்வனின் மரணத்தில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து கொலை தொடர்பாக காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீஸாரால் தேடப்பட்டு வந்த அதிமுக பிரமுகர் திருமணவேல், முத்துகிருஷ்ணன் ஆகிய இருவரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இந்நிலையில் அதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் திருமணவேலை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி ஓபிஎஸ்-இபிஎஸ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like