1. Home
  2. தமிழ்நாடு

அக்னிவீரராக சேர கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு அழைப்பு!

Q

இந்திய ராணுவத்தில் அக்னிவீரர்களாக சேர இந்திய ராணுவம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த திட்டம் மூலம் ஆட்சேர்ப்புக்கு கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி, தருமபுரியை சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள இளைஞர்கள் மார்ச் 12 முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை www.joinindianarmy.nic.in என்ற இணைதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். முதலில் ஆன்லைன் பொது தேர்வு நடத்தப்பட்டு பின்னர் ஆட்ச்சேர்ப்பு முகாம் நடத்தப்படும் எனவும் தேர்வு தேதிகள் விரைவில் அதிகாரபூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கூடுதல் தகவல் மற்றும் உதவிக்கு விண்ணப்பதாரர்கள் சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் (தலைமையகம்), 600009 மற்றும் தொலைபேசி எண் 044-25674924 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம்.

Trending News

Latest News

You May Like