1. Home
  2. தமிழ்நாடு

பணம் பறிக்கும் நோக்கத்தில் மிரட்டிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது..!

Q

சிவசண்முகசந்திரசேகர் மகன் ராஜகுரு என்பவரை திருநெல்வேலி, தச்சநல்லூர், மங்களாகுடியிருப்பைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் சண்முககொம்பையா (வயது 21) என்பவர் தச்சநல்லூர், ஊருடையார்புரம் விலக்கு அருகே 2025 ஏப்ரல் 3-ம் தேதி பணம் பறிக்கும் நோக்கத்துடன் மிரட்டல் விடுத்துள்ளார்.
மேற்சொன்ன வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த சண்முககொம்பையா, திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (மேற்கு) கீதா, ஜங்ஷன் சரகம் காவல் உதவி கமிஷனர் தர்ஷிகா நடராஜன் மற்றும் தச்சநல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் ஆகியோரின் பரிந்துரையின்பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி ஆணைப்படி இன்று (08.04.2025) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார். 

Trending News

Latest News

You May Like