+1 மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது: வாலிபர் போக்சோவில் கைது..!
வேலூரை சேர்ந்தவர் பைரோஷ் (வயது 22). இவரது நண்பர் சத்துவாச்சாரி அருகே வசித்து வருகிறார். அந்த நண்பரை பார்க்க அவரது வீட்டுக்கு அடிக்கடி சென்றுள்ளார். அப்போது அங்கு அரசு பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியின் அறிமுகம் கிடைத்துள்ளது. தொடர்ந்து அவர்கள் பழகி வந்துள்ளனர். பைரோஷ் சிறுமியிடம் காதலிப்பதாக கூறி உள்ளார். மேலும் இருவரும் நெருங்கி பழகியதில் சிறுமி கர்ப்பமானார்.
சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை அறிந்த பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளனர். அதில் சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் விசாரித்ததால் கர்ப்பத்திற்கு காரணம் பைரோஸ் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே கடந்த 20-ந் தேதி அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. அதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ரேகா மற்றும் போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து பைரோசை கைது செய்தனர்.