18+ படங்களுக்கு அடிமையாகி இளைஞர் செய்த கேவலமான செயல்..!

கர்நாடகாவின் தும்குரு மாவட்டத்தில் பொறியியல் பட்டதாரி ஒருவர் தனது வீட்டு அருகில் உள்ள மாணவிகளின் உள்ளாடைகளை திருடிய காரணத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 25 வயதான அந்த நபரின் ஷரத் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் தும்குரு மாவட்டத்தில் SIT-இல் உள்ள IV கிராஸ் பகுதியில் வசித்து வருகிறார்.
இவர் அந்த பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கும் மாணவிகள் சிலர் கடந்த சில நாள்களாக தங்களின் உள்ளாடைகள் தொடர்ந்து காணாமல் போவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கவலைக்குள்ளாகி உள்ளனர். இதுகுறித்து உடனே தங்களின் வீட்டு உரிமையாளர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, அந்த வீட்டின் உரிமையாளர் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பார்த்ததில் ஷரத், அந்த மாணவிகளின் வீட்டின் அருகே தனது இருச்சக்கர வாகனத்தை நிறுத்துவதும், உள்ளாடைகளை திருடுவதும் பதிவாகியுள்ளன. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டு உரிமையாளர் உடனே காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே ஷரத்தை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, போலீசார் ஷரத்திடம் மேற்கொண்ட விசாரணையில் மாணவிகளின் உள்ளாடைகளை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். அந்த SIT பகுதியில் இருக்கும் எஸ்எஸ் புரம், அசோக் நகர் ஆகிய இடங்களில் இதுபோன்ற செயலில் அவர் ஈடுபட்டுள்ளார். போலீசாரின் விசாரணையில் இவர் ஆபாச படங்களுக்கு அடிமையானது தெரியவந்துள்ளது. தான் நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு வீடு திரும்பியபோது, அங்கிருந்த மாணவிகளின் உள்ளாடைகள் பார்த்ததை அடுத்து, அதனை திருடிச்சென்றதாக தனது குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.
கைதான ஷரத், தும்குரு மாவட்டத்தில் உள்ள சிக்கநாயக்கனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். அவரது பெற்றோர் ஆசிரியர்களாக பணியாற்றி உள்ளனர். அவரது மூத்த சகோதரரும் ஒரு பொறியாளராக பணியாற்றி வருகிறார். ஷரத்தின் இதுபோன்ற நடவடிக்கைகள் அவர்களது குடும்பத்தினருக்கு போலீசார் அவரை கைது செய்யும் வரை தெரிந்திருக்கவில்லை. இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபடக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் ஷரத் போலீசாரால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மாணவிகள் புகார் அளிக்கவோ அல்லது சாட்சி வாக்குமூலம் அளிக்கவோ முன்வரவில்லை என போலீசார் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.