1. Home
  2. தமிழ்நாடு

இளம் தலைமுறையினரின் வாழ்க்கையை அழிக்கும் மாடலாக உங்கள் திராவிட மாடல் உள்ளது - திமுகவை வச்சு செய்த தவெக!

1

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் சாராய விற்பனையை தட்டிக் கேட்ட இரண்டு கல்லூரி மாணவர்கள் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திமுக அரசின் நிர்வாகத் திறமை பல் இளிக்கிறது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.

பாதுகாப்பு இல்லாத தமிழ்நாடு என்று மக்கள் அனைவரும் அச்சத்தில் இருக்கிறார்கள். கள்ளச் சாராய விற்பனையை இரும்பு கரம் கொண்டு அடக்குவேன் என்று சொன்னார்கள். அந்த இரும்பு கரம் தற்பொழுது என்ன ஆனது? இரும்பு கரம் காணாமல் போய் விட்டதா? தேடி கண்டுபிடித்து தரட்டுமா? மக்களை பாதுகாக்க வேண்டிய அரசாங்கம் அதை செய்வதை விட்டுவிட்டு வெறும் வெற்று விளம்பரம் மட்டும் செய்து வருகிறது.

அமைதி பூங்காவாக இருக்க வேண்டிய தமிழ்நாடு கொலை களமாக மாறி உள்ளது வேதனை தருகிறது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்க திமுக அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? திராவிட மாடல் என்று சொல்வதை விட விளம்பர மாடல் என்று பெயர் மாற்றிக் கொள்ளுங்கள். இந்த அரசாங்கம் ஷூட்டிங் அரசாங்கமாக உள்ளது.

"அப்பா" வாக இருப்பதில் பெருமையாக உள்ளது என்று சொல்வதில் பெருமை இல்லை. அப்பாவாக நடந்து கொள்வதில்தான் பெருமை உள்ளது. இளம் தலைமுறையினரின் வாழ்க்கையை அழிக்கும் மாடலாக உங்கள் திராவிட மாடல் உள்ளது.மக்களின் வெறுப்பை சம்பாதிக்கும் அரசாக திராவிட மாடல் அரசாங்கள் உள்ளது.

அதிகாரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்கிறீர்கள்? பாயாசம் கிண்டி கொண்டிருக்கிறீர்களா?கள்ளச் சாராய விற்பனையை தடுக்க முடியாமல் தடுமாறும் திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். மக்கள் உங்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள். ஸ்டாலின் அப்பா சட்ட ஒழுங்கை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள் அப்பா.. இவ்வாறு தவெகவின் லயோலா மணி குறிப்பிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like