1. Home
  2. தமிழ்நாடு

இளைஞர்களே ரெடியா ? ஜுலை 3ம் தேதி முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும்..!

1

கல்லூரி இறுதியாண்டில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சில கல்லூரி, பல்கலைக்கழகங்களில் தாமதமாக தேர்வுகள் நடத்தி முடிவுகள் வெளியிடப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட கல்லூரியில் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் என்பது முடிந்து விடுகிறது என கவலை தெரிவித்தார்.

மேலும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் ஒரே நேரத்தில் தேர்வுகள் நடத்தி ஒரே நேரத்தில் முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் பொன்முடி தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தான் தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒரே நேரத்தில் தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிடுவதற்கான அறிவிப்பை கல்லூரி கல்வி இயக்குநர் கார்மேகம் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து கலை, அறிவியல் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரி கல்வி இயக்குநர் கார்மேகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதோடு அதில் உள்ள உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் உள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் கல்வியாண்டில் கலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்கான வகுப்புகள் ஜுலை 3ம் தேதி தொடங்க உள்ளன.

இந்த கல்வியாண்டு முதல் செமஸ்டர் தேர்வுகளை ஒரே நேரத்தில் நடத்தி ஒரே நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும். அதன்படி இந்த கல்வியாண்டின் முதல் செமஸ்டர் தேர்வுகளை வரும் அக்டோபர் 31ல் தொடங்கி நவம்பர் 25ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அதன்பிறகு டிசம்பர் 16ம் தேதிக்குள் அனைத்து கல்லூரிகளுக்குமான தேர்வுகள் முடிவுகள் வெளியிடப்பட வேண்டும்.

அதன்பிறகு அடுத்த செமஸ்டர் தேர்வுகளை 2025 ஏப்ரல் 15ம் தேதி தொடங்கி மே 10ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இந்த செமஸ்டர் தேர்வு முடிவுகளை 2025 மே 31ம் தேதிக்குள் வேண்டும். இதனை அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் பின்பற்ற வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது. மேலும் செமஸ்டர் தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பாக மீண்டும் ஒருமுறை தேர்வு தேதி உறுதி செய்து அறிவிப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like