1. Home
  2. தமிழ்நாடு

இளைஞர்களே ரெடியா..? மார்ச் 14-ம் தேதி தமிழக அரசு நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்..!

Q

மார்ச் 14-ம் தேதி மாயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர திட்டமிடப்பட்டுள்ளது

 

தமிழக அரசின் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்தையும் சுற்று இருக்கும் முன்னணி தனியார் நிறுவனங்களை ஒன்றிணைந்து இந்த முகாம்கள் நடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு கல்வித்தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. மேலும், திறன் பயிற்சிக்கான பதிவுகள், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பற்றியுடன் எடுத்துரைக்கப்படுகிறது.

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. 14.03.2025 தேதி காலை 9 மணி முதல் 3 மணி வரை குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இந்த முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் மயிலாடுதுறை மாவட்டம் உட்பட பிற மாவட்டங்களிலிருந்து 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்திலுள்ள காலிப்பணியிடங்களுக்காக 500-க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள், டிப்ளமோ, ஐடிஐ, பொறியியல் படிப்புகள் மற்றும் பட்டப்படிப்பை முடித்தவர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

தேவையான ஆவணங்கள்

சுய விவர அறிக்கை

கல்விச் சான்றிதழ்கள்

ஆதார் அட்டை

புகைப்படம்

முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ்

தனியார் வேலைவாய்ப்பு குறித்து அறிந்துகொள்ள தமிழக அரசு ஏற்படுத்தி தரும் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04364-299790/ 9499055904 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்

Trending News

Latest News

You May Like