1. Home
  2. தமிழ்நாடு

இளைஞர்களே ரெடியா..? கோவை மாநகரில் இந்த வாரம் வேலைவாய்ப்பு முகாம் நடக்கபோகுது!

Q

கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், கோவை மாவட்ட நிர்வாகம் - மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கவுள்ளது.
இந்த முகாம் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது. இதில், 10, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்த அனைத்துத் தரப்பினரும் தங்களின் சுயவிவரம் மற்றும் கல்விச் சான்றுகளின் நகல்களுடன் கலந்துகொள்ளலாம்.
இம்முகாமில் தோ்வு செய்யப்படும் தோ்வா்களுக்கு வேலைக்கான உறுதி கடிதம் உடனடியாக வழங்கப்படும். இதில் பங்கேற்க வயது வரம்பு இல்லை, அனுமதியும் இலவசம். எனவே, முகாமில் கலந்துகொள்ள விரும்பும் வேலைதேடுவோா் மற்றும் தனியாா் நிறுவனங்கள் www.tnprivatejobs.tn.gov.in மற்றும் www.ncs.gov.in என்ற இணையதளங்களில் பதிவு செய்துகொள்ளலாம்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0422 - 2642388 என்ற எண்ணை தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like