காதலுக்கு தாடி இல்லாத ஆண்கள் வேண்டும் என்ற பதாகையுடன் இளம்பெண்கள் ஊர்வலம்..!
இந்தூரில் ‘காதலுக்கு தாடி இல்லாத ஆண்கள் வேண்டும்’ என்ற பதாகையுடன் இளம்பெண்கள் ஊர்வலம் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பெண்கள் பல்வேறு பேனர்களை ஏந்தியபடி உள்ளனர். குறிப்பாக 'தாடியை அகற்று, காதலை காப்பாற்று' என்ற பேனரும், 'நோ கிளீன் ஷேவ், நோ லவ்' மற்றும் ' தாடி வேண்டுமா, காதலி வேண்டுமா? தேர்வு உங்கள் கையில்' என்ற பேனரும் பெண்கள் ஏந்தியிருந்தனர்.
இந்த வீடியோ வைரலான பிறகு, தாடி வைத்த ஆண்கள் அழகாக இருக்கிறார்களா? அல்லது தாடி இல்லாத ஆண்கள் அழகானவர்களா? என நெட்டிசன்கள் இணையத்தில் காரசாரமாக விவாதம் செய்தனர். இந்த பேரணி உண்மையான பேரணியா? ரீல்ஸ்க்காக வீடியோ எடுத்தார்களா? என விவரங்கள் தெளிவாக இல்லை. இது தொடர்பான காரசார விவாதம் இணையத்தில் நடந்து வருகிறது.
#WATCH | No Clean Shave, No Love: Indore Girls Take to the Streets with a Unique Condition for Dating Boys!#IndoreNews #viralvideo pic.twitter.com/yepTLKAZDL
— Free Press Madhya Pradesh (@FreePressMP) October 18, 2024