1. Home
  2. தமிழ்நாடு

இந்தியாவில் உள்ள இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் - நாராயண மூர்த்தி..!

1

சமீபத்தில் பாட்காஸ்ட் ஒன்றில் பங்கேற்ற இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தி, ``இளைஞர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். இந்தியாவின் பணி உற்பத்தித் திறன் உலகிலேயே மிக குறைவாக உள்ளது.

சீனா போன்ற நாடுகளுடன் போட்டியிட வேண்டுமெனில், நம் நாட்டின் இளைஞர்கள் இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் மற்றும் ஜெர்மனி செய்ததைப் போல கூடுதல் மணி நேரம் வேலை செய்ய வேண்டும். 

மிகவும் கடினமாக உழைக்கும் வகையில் நாம் மாற வேண்டும். அது நடந்தால் தான் பொருளாதார ரீதியாக உலக அளவில் நம் நாடு வளர்ச்சி காண முடியும். அந்த செயல்திறன் அங்கீகாரம் அளிக்கும், அது மரியாதையையும், அதிகாரத்தையும் வழங்கும். அதனால் இந்த நாட்டின் இளைஞர்களுக்கு நான் சொல்வதெல்லாம் நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் என அடுத்த 20 - 50 ஆண்டுகள் வரை உழைக்க வேண்டும். அப்போது தான் ஜிடிபி-யில் முதல் அல்லது இரண்டாவது இடத்தில் இந்தியாவால் இருக்க முடியும்.

இந்தியாவின் தொலைதூர கிராமத்தில் உள்ள ஏழை குழந்தையின் எதிர்காலம் நமது இளைஞர்களின் தோள்களில் உள்ளது. அந்த பொறுப்பை அவர்கள் உணர வேண்டும்” என நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாராயண மூர்த்தி சொன்ன இந்தக் கருத்து சமூக வலைத்தளத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, இவரின் பேச்சு மேல்தட்டு மக்களின் தரப்பில் இருந்து பேசப்படுவதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like