1. Home
  2. தமிழ்நாடு

லைக்ஸ்காக நடுரோட்டில் இறந்ததைப் போல நடித்த இளைஞர்..!

Q

உத்தரபிரதேச மாநிலத்தில் பட்டப்பகலில் சாலையில் ரீல்ஸ் தயாரித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். நடுரோட்டில் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக இறந்தவரைப் போல நடித்துள்ளார் முகேஷ் குமார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கஸ்கஞ்சில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. முகேஷ், ரீல்ஸ் வீடியோவுக்காக இறந்தது போல் நடிப்பதை வைரல் வீடியோ காட்டுகிறது. மேலும் அந்த வீடியோ காட்சியில், மக்கள் முகேஷ் ஒரு சடலத்தைப் போல இருப்பதைப் பார்க்கிறார்கள். திடீரென முகேஷ் குமார் எழுந்து சிரிக்கத் தொடங்கும்போது அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, சம்பவத்தை அறிந்த போலீசார் முகேஷைக் கைது செய்தனர்.


 


 

Trending News

Latest News

You May Like