வாட்ஸ்அப் ஸ்டேட்டஸால் சிறை சென்ற இளைஞர்.. பக்கத்து வீட்டில் நடந்த கொடூரம் !

ஹைதராபாத்தில் ரச்சகொண்டா பகுதியில் அங்கிடி ரவிகிரண் என்பவர் வீட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி கொள்ளையடிக்கப்பட்டது. அவர் வீட்டில் இல்லாதப்போது புகுந்த கொள்ளையர்கள் நகைகளை அள்ளிச்சென்றனர்.
இது குறித்த விசாரணையின் போது ரவிகிரண் கோவிலுக்கு செல்லும் அவசரத்தில் வீட்டை பூட்டாமல் சென்றுவிட்டதாக கூறியுள்ளார். இதனால் கொள்ளையன் எவ்வித டென்ஷனும் இல்லாமல் நகைகளை அள்ளிச் சென்றனார். இது தொடர்பான புகாரில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
அதன்பிறகு, சமீபத்தில் ரவிகிரணின் பக்கத்து வீட்டு பெண்மணி வாட்ஸ்அப்பில் தனது போட்டோ ஒன்றை ஸ்டேட்டஸ் வைத்திருக்கிறார். அந்தப் பெண், தன் வீட்டில் திருட்டுப்போன நகையைப் போன்றே ஒரு நகையை அணிந்திருப்பதை கவனித்த ரவிகிரணன் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே அங்கு விரைந்த போலீசார் அந்த பெண்ணிடம் பலகோணங்களில் விசாரணை நடத்தினர். அப்போது அப்பெண்ணின் மகன் பொன்னுகோட்டி ஜிஜேந்தர் நகையைத் திருடியது தெரியவந்திருக்கிறது. வீடு திறந்திருந்த நிலையில் யாரும் இல்லாததால் நகையை திருடியதாக அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறுகின்றனர்.
இதனையடுத்து அவரை கைதுசெய்த போலீஸார், அதற்கு உதவியாக இருந்த அந்த பெண்மணிக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தொடர்ந்து விசாரண நடைபெற்று வருகிறது.
newstm.in