1. Home
  2. தமிழ்நாடு

நல்ல லாபம் கிடைக்கும்... பிரதமர் பெயரில் போலி ஏ.ஐ வீடியோ..!

Q

ஒரு திட்டத்தில் முதலீடு செய்யும்படி, பிரதமர் மோடி சொல்வது போன்ற வீடியோ உலா வருகிறது. இதை உண்மை என நம்பி, பலரும் பணம் கட்டி ஏமாறும் நிலை உள்ளது.

பிரதமர் மோடி பேசுவது போல், ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டு மக்கள் பயன் பெறும் வகையில், ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளேன். இதில் ஒரு முறை, 21,000 ரூபாய் முதலீடு செய்தால் போதும். அந்த வாரமே உங்கள் வங்கி கணக்கில், 1.6 லட்சம் ரூபாய் வரும். இந்த திட்டத்தில் சேர, இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் நபர்களை கண்டறிந்து, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சைபர் வல்லுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 'இதேபோன்று உலா உரும் வீடியோக்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்' என, அரசு எச்சரித்துள்ளது.

Trending News

Latest News

You May Like