1. Home
  2. தமிழ்நாடு

எப்போதுமே உங்களுக்கு எதிர்க்கட்சி வரிசைதான் : பிரதமர் மோடி தாக்கு..!

1

பாராளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 

பாராளுமன்றத்தில் அனைவரும் ஜனாதிபதிக்கு பின்னால் அணிவகுத்து வந்தோம். இந்தியா விடுதலை பெற்றபோது, அதற்கு சாட்சியாக விளங்கிய இந்த செங்கோல் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்துகிறது. புதிய பாராளுமன்ற நடைமுறைகளுக்கு செங்கோல் முன் நின்று வழிகாட்டுகிறது. ஜனாதிபதியின் உரை மாபெரும் உண்மைகளை சொல்லியது. நாடு எந்த வேகத்தில் வளர்ச்சி பெறுகிறதோ அதை ஜனாதிபதி உரை வெளிப்படுத்தி உள்ளது. நான்கு தூண்கள் பற்றி ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். நான்கு தூண்கள் மூலம் நாடு வேகமாக வலுவடையும்.

மதத்தின் அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்துவதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும். சிறுபான்மையினர் எனக் கூறியும் எதிர்க்கட்சிகள் நாட்டை பிளவுபடுத்துகின்றன. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி நீண்ட நாள்களாகவே எதிர்க்கட்சி வரிசையிலேயே உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் எப்போதுமே இனி எதிர்க்கட்சி வரிசையில்தான் இருப்பார்கள். ஓர் எதிர்க்கட்சியாகவும் நாட்டு மக்களை அவர்கள் (காங்கிரஸ்) திருப்திப்படுத்தவில்லை.

நாட்டிற்கு எப்போதுமே ஒரு ஆரோக்கியமான எதிர்க்கட்சி அவசியம் என்று எப்போதுமே நான் சொல்வதுண்டு. பலருக்கு தேர்தலில் போட்டியிடும் தகுதியே இல்லை. சில தொகுதிகளில் பல அதிரடி மாற்றங்களை எதிர்க்கட்சி செய்தது. இந்த முறையும் போட்டியிடும் தொகுதிகள் மாறலாம். மக்களவைக்கு வருவதற்கு பதிலாக பலர் மாநிலங்களவைக்கு செல்லவே விரும்புகின்றனர்.  காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளால் நாட்டிற்கே பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like