1. Home
  2. தமிழ்நாடு

வீணாய்ப் போனவர்களே! உனக்கு என்ன நடந்தால் நீ திருந்துவாய்? இன்ஃப்ளூயன்சர்களை வறுத்தெடுத்த ஜேம்ஸ் வசந்தன்..!!

Q

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியிருப்பதாவது: நேற்று வரை நம்மோடு பேசித் திரிந்த 40 பேர் கூட்ட நெரிசலில் நசுங்கி, மூச்சுதிணறி, கொடுமையாக மரணித்திருக்கின்றனர்.

கரூர் முழுவதும் மரண ஓலம். குடும்பங்களில் ஒப்பாரி. இழவு வீடுகளில் வெறுமையைப் பார்த்துக் கொண்டு அம்மா, அப்பா, கணவன், மனைவி, பெற்றோர் என எல்லோரும் விவரிக்க முடியாத விரக்தியில் அமர்ந்திருக்க - "WE STAND WITH VIJAY" என்று கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் சமூக ஊடகங்களில் செய்தி பரப்புகிறீர்களே, வீணாய்ப் போனவர்களே! உனக்கு என்ன நடந்தால் நீ திருந்துவாய்? எது நடந்தால் உனக்கு இழப்பின் அருமை புரியும்?

ஒரு விபத்தின் அடிப்படை உண்மைகளை விளங்கிக் கொள்ள முடியாத அளவுக்கா உன் அறிவு மழுங்கியிருக்கிறது? ஒரு நடிகனை ரசிப்பது உன் மனசாட்சியைக் கொல்லும் அளவிற்கா கொண்டு போய் விடும்?

அவன் நடித்து புகழும், பணமும் ஈட்டியதைவிட உனக்காக என்ன செய்துவிட்டான்? எதற்காக 40 உயிர்களின் இழப்பைக் கூட கொச்சைபடுத்தும் அளவிற்கு தரம்தாழ்ந்து போனாய்?

தமிழ்நாட்டை வியந்து பார்க்கும் பிற மாநிலங்களும், பிற நாடுகளும், நம்மை ஏளனமாய் பார்க்கவைத்து விட்டீர்களே! மரணித்தவரின் ஆன்மாக்கள் உங்களை விடாது!

பேய்கள் உங்களைத் துரத்தும்!

உங்கள் வாழ்வு சிறக்காது!

Trending News

Latest News

You May Like