உங்களுக்கு 4 நாள் தான் டைம்..! இஸ்ரேல் ராணுவத்துக்கு ஹவுதி வார்னிங்..!

ஓராண்டுக்கும் மேலாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் என்ற பயங்கரவாத அமைப்பு இடையே போர் நடைபெற்று வந்தது. அந்த போரில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனா். இந்த போரில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் களம் இறங்கினா்.
அந்த கிளர்ச்சியாளர்கள், செங்கடல் வழியாக தாக்குதலை நடத்தினா். இதற்கிடையே தற்போது இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் அமைதி ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பணய கைதிகள் கைமாற்றம் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் பாதிப்புக்கு ஆளான காஸாவுக்கு அடிப்படை பொருள்கள் சப்ளை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவம், காஸா மக்களுக்கு பொருள்கள் வழங்குவதை தடுத்து நிறுத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில் காஸா மக்களுக்கு வழங்கப்படும் உதவிகளை தடுத்து நிறுத்தும் திட்டத்தை இஸ்ரேல் ராணுவம் கைவிட வேண்டும் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை கொடுத்து உள்ளனா். இதற்காக 4 நாட்கள் அவர்கள் கெடு விதித்து உள்ளனா்.