உங்களுக்கு 3 நாள் தான் டைம்... தனியார் பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்..!
கோவை காந்திபுரம் பகுதியில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தனியார் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார்.
கோவை மாநகரில் இயங்கும் 149 தனியார் டவுன் பேருந்துகளில் 129ல் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதும் வெளியூர் செல்லும் 107 தனியார் பேருந்துகளில் 50 ல் சிசிடிவிகள் நிறுவப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு பேருந்திலும் 5 முதல் 7 வரையிலான சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன என தெரிவித்த கோவை மாநகர காவல் ஆணையர் சிசிடிவி நிறுவப்படாத அனைத்து தனியார் பேருந்துகளிலும் இன்னும் மூன்று தினங்களுக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.
.png)