எந்த கட்சி தமிழ்நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டுமோ அதை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் - விஜய் பேச்சுக்கு பாரி வேந்தர் வரவேற்பு
ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர்: “தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் தன்னெழுச்சியாக மக்கள் கூட்டம் வந்து கலந்து கொண்டதையும், அவர்களது உணர்வையும் பார்க்க முடிந்தது. மாநாட்டில் நீங்கள் ஆற்றிய உரை மெய்சிலிர்க்க வைத்தது, இன்றைக்கு எந்த கட்சி தமிழ்நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டுமோ? அதை துணிவோடும், தெளிவோடும், வீரத்துடனும், விவேகத்துடனும் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். தமிழ்நாட்டில் உங்கள் முயற்சி வெற்றி பெற தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. எல்லாவற்றிலும் உச்சமாக சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் கூட்டாட்சி தத்துவத்தின் முக்கியத்தை முன்னிலைப்படுத்தி இருக்கிறீர்கள். வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துக்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.