1. Home
  2. தமிழ்நாடு

உங்களுக்கு 48 மணி நேரம் தான் டைம் : அரசு பேருந்தில் உள்ள குறைகளை சீரமைக்க உத்தரவு..!

1

 தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்திற்குள் முழுவதுமான ஆய்வு செய்ய வேண்டும். பின்பு அந்த பேருந்தில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளது என்பதை உடனடியாக கண்டறிந்து அவற்றை அடுத்த 48 மணி நேரத்திற்குள் சீரமைக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பேருந்துகள் சேதமடைவது தொடர்பான புகார்கள் எழுந்தது. முக்கியமாக சில தினங்களுக்கு முன் ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது.இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து புதிய பேருந்துகளை தமிழ்நாடு அரசு வாங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like