மண்டை மேல இருக்குற கொண்டையை மறந்துட்டியே... பொய் சொல்லி சுற்றுலா சென்ற ஊழியர்... ரீல்ஸ் மூலம் மாட்டிக்கொண்ட பரிதாபம்..!

நாம் வேலை செய்யும் நிறுவனத்தில் வாரத்தில் சனி, ஞாயிறு விடுமுறை, இருந்தால் வெள்ளிக்கிழமை அல்லது திங்கள்கிழமை ஏதாவது பொய் சொல்லி விடுமுறை எடுபவர்களை நாம் பார்த்திருப்போம்..சில சமயம் அவர்கள் மேனேஜரிடம் மாட்டிக்கொள்ளும் சம்பவமும் நடைபெறும். அதுபோல தான் இங்க ஒரு சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது
சம்பந்தப்பட்ட ஊழியர் வயிற்று வலி என கூறி வெள்ளிக்கிழமை ஒரு நாள் லீவு கேட்டுள்ளார். மேனேஜரும் “Take care” என பதிலளித்து, அனுமதி வழங்கிவிட்டார். அந்த ஊழியர் லீவு நாளுடன் சனி, ஞாயிறு சேர்த்து 3 நாட்கள் விடுமுறையை பயன்படுத்தி, கூர்க் பகுதிக்குச் சுற்றுலா சென்றுள்ளார். குஷியாக நடனமாடிக் கொண்டிருந்தபோது ஒரு ரீல்ஸ் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலானது.
அந்த வீடியோ அவரது மேனேஜர் கவனத்திற்கு சென்றது. திங்கட்கிழமை அலுவலகத்திற்கு வந்த ஊழியரிடம் “உங்களுடைய வயிற்று வலி தீர்ந்துவிட்டது என நம்புகிறேன்” என காட்டமாக கூறினார். அதன் பிறகு அவர் எந்த சந்தர்ப்பத்திலும் வொர்க் ஃப்ரம் ஹோம் கேட்டு அனுமதி பெற முடியாது என கூறியுள்ளார். மேலும் இச்சம்பவம் நெட்டிசன்களில் பெரும் விவாதத்தையும், சிரிப்பலையையும் ஏற்படுத்தியுள்ளது.